திருப்பூர் மாநகராட்சி,திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் துப்புரவாளன் அமைப்பு இணைந்து நடத்திய திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம் மற்றும் குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமார் கலந்து கொண்டு திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு குறும்படம் வெளியிட்டார். மாநகர ஆணையாளர் கிராந்தி குமார் பாடி, ரோட்டரி ஆளுநர் இளங்குமரன், திருப்பூர் மேற்கு ரோட்டரி தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் குப்பை மேலாண்மையை சிறப்பாக கையாளும் பள்ளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள்.
வீரபத்மன், பாலகிருஷ்ணன் ஆகியோர் திட்ட விளக்கவுரையாற்றினர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பல்வேறு சேவை அமைப்பினர் கலந்து கொண்டனர்.
மேலும் துணை மேயர்ஆர்.பாலசுப்பிரமணியம் , மண்டல தலைவர்கள் உமாமகேஸ்வரிவெங்கடாஜலம் மற்றும் கோவிந்தராஜ் பகுதி கழகச் செயலாளர் மியாமி அய்யப்பன் மற்றும் முருகசாமி , மாமன்ற உறுப்பினர்கள் சின்னச்சாமி, சேகர், அனுசுயா தேவி, பத்மாவதி, தாமோதரன், கவிதா நேதாஜி கண்ணன் மற்றும் சாந்தாமணி , வட்ட கழக செயலாளர் சுகுமார் ,மாநகர சுகாதார அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.