தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கான சிறப்பு சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடி அடுத்துள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட கணபதி நகர் பகுதியில் 24 1 20 23 செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற்றது.
உதவி இயக்குனர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மருத்துவர் ஜோசப் தலைமையில் நடைபெற்ற இந்தமுகாமில் மாப்பிள்ளையூரணி கால்நடை உதவி மருத்துவர் வினோத் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சைகளை அளித்தார்.
இந்த மருத்துவ முகாமில் கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் செய்தல், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல், தாது உப்பு கலவை வழங்குதல், கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் கோழி களிசல் தடுப்பூசி உள்ளிட்டவை போடுதல், என பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இதனால் இப்பகுதியில் கால்நடைகளை வளர்க்கும் மக்கள் பெரிதும் பயணடைந்தனர்.
முகாமில் கால்நடை ஆய்வாளர் ஷர்மிலி, கால்நடை பராமரிப்பு உதவி அலுவலர் பரமசிவம், ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.
முகாமில் பங்கேற்ற சிறந்த இடையேறி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயி மூன்று பேருக்கு சீல்டு வழங்கப்பட்டது.
சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமில் 75 பசுமாடுகளும் 719 வெள்ளாடுகளும் 89 நாய்களும் 250 கோழிகளும் பயன் பெற்றன. விழிப்புணர்வு முகாமை தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை தூத்துக்குடி மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.