விளாத்திகுளம் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள்: பேரூராட்சிகளின் இயக்குநா் கிரண் குராலா ஆய்வு.!

 

விளாத்திகுளம் பேரூராட்சி பகுதிகளில்  செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகளை பேரூராட்சிகள் இயக்குனர் கிரண் குராலா ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை பேரூராட்சிகள் இயக்குனர் கிரண் குராலா ஆய்வு செய்தார். விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்தாா். பின்னா் விளாத்திகுளம் பாரதியாா் பேருந்து நிலைய வளாகம், பூங்கா உள்ளிட்ட இடங்களை பாா்வையிட்டு அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தாா். 

விளாத்திகுளம் கிளை நூலகத்தில் ஆய்வு செய்து போட்டி தேர்வுக்கு பயின்று வரும் மாணவர்களிடம் கலந்துரையாடி குடிநீர் வசதி, போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், தமிழ்நாடு அரசு பாடநூல் கழக புத்தகங்கள் போன்ற தேவைகளை கேட்டறிந்தார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேலுசாமி, செயல் அலுவலர் சுந்தரவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post