பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகல்.- தமிழக பாஜகவில் பெண்களுக்கு மரியாதை, சமஉரிமை இல்லை என புகார்.!

பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவிப்பு.!

கனத்த இதயத்துடன் கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு.!

பிரதமர் மோடி, அமித்ஷா, ஜெ.பி நட்டா ஆகியோருக்கும் விலகலை பகிர்ந்துள்ளார்.

அண்ணாமலை தலைமையின்கீழ் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. 

உண்மை தொண்டர்களுக்கு பாஜகவில் மதிப்பு இல்லை; அண்ணாமலைக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அண்ணாமலை மலிவான, பொய் பேசும், அதர்மத்தின் பக்கம் நிற்கும் தலைவர்; நான் பாஜகவில் இருந்து விலகுவதற்கு அவர்தான் காரணம்; என்னால் அவரது தலைமையின் கீழ் செயல்பட முடியாது.

பெண்களே, உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்; மரியாதை இல்லாத இடத்தில் பெண்கள் தொடர்ந்து இருக்க கூடாது.

என்னிடம் உள்ள ஆடியோ, வீடியோக்களை போலீசிடம் வழங்கி, அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என புகாரளிக்கவுள்ளேன்!- என காயத்ரி ரகுராம் பேச்சு.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post