டெல்லியில் இருந்து தாய்லாந்துக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து புறப்பட்ட சில நிமிடங்களில் அவசரமாக டெல்லிக்கு திரும்பியயதையடுத்து பயணிகள் பாதுகாப்பாக தரையிறங்கினர்.
இண்டிகோ விமானம் 6E-1763 இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு காலை 6.41 மணிக்கு புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் காலை 7.31 மணிக்கு டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறைக் கண்டறிந்த பிறகு, இண்டிகோ விமானி முன்னெச்சரிக்கையாக தரையிறங்க அனுமதி கேட்டார். இதையடுத்து, ஏடிசி விமானத்தை தரையிறக்க அனுமதித்தது. இதன் போது, முழுமையான அவசர (emergeny Lading) தரையிறக்கம் அறிவிக்கப்பட்டது.. என தெரிவித்தார்
அதிகாரப்பூர்வ அறிக்கையில், விமான நிறுவனங்கள் இந்த சம்பவத்தை உறுதிசெய்து, “டெல்லியில் இருந்து ஃபூகெட்டுக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் 6E1763 இன்று டெல்லியில் இருந்து புறப்பட்ட பிறகு தொழில்நுட்ப சிக்கலை சந்தித்தது. தேவையான பராமரிப்புக்காக விமானம் மீண்டும் டெல்லிக்கு திரும்பியது.
அனைத்து பயணிகளும் இறக்கிவிடப்பட்டு முனைய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டனர், அதே நேரத்தில் அடுத்த நடவடிக்கைக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
"ஃபுகெட் செல்லும் விமானத்திற்கு பயணிகளுக்கு மாற்று விமானம் வழங்கப்படுகிறது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.