திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று திருப்பூரில் உள்ள கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடந்தது . இதில் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் அதிகாலை 4 மணி முதல் அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ரூபாய் நோட்டு அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.