பாலாறு வேளாண்மை கல்லூரி ஊரக வேளாண் பணி அனுபவ திட்டம் மூலம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாணவிகள் 75 நாட்கள் கிராமத்தில் தங்கி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் மூலம் புதிய புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்கள் வழங்கினர் .
இதில் தென்னெயில் கரையான் தாக்குதலை கட்டுப்படுத்த சந்திராபுரம் கிராமத்தில் மாணவிகள் அ.லயீக்கா ஃபர்ஹீன், அ.ர.கார்த்திகா, ர.காவியா, ப. கார்த்திகா, சு.கீர்த்தனா, ம.லலிதா, கே.லக்ஷ்மி தீபிகா, சா.மணிஷா, சே.மோனிகா உள்ளிட்ட குழுவினர்,
ஓடன்டோடெர்மஸ் ஒபிஸஸ் என்று ஒரு வகையான பூச்சி தாக்குதலின் அறிகுறிகள், பூச்சியை அடையாளம் காணுதல், குறித்த மேலாண்மை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துத்துரைத்தனர்.
பின்னர் கரையான் தாக்குதலை தடுக்க மரத்தின் அடிப்பகுதியில் சுண்ணாம்பு கரைசலைப் பூசுவதன் மூலமும், வேப்ப எண்ணெய் கலந்து வளர்ந்த மரத்தில் தரையிலிருந்து 2 மீ உயரம் வரை தண்டுப்பாகத்தில் பூசுவதன் மூலமும் கரையான் தாக்காமல் தவிர்க்கலாம் என்பதையும் எளிய முறையில் விவசாயிகளுக்கு எடுத்து கூறினர்.
இந்நிகழ்வில் அக்கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் மேலாண்மை குறித்த தகவல்களை கேட்டு பயன் பெற்றனர்.