தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நாட்டின் 74வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் 74வது குடியரசு தினவிழா மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தலைமையில் நடந்தது. மேயர் ஜெகன் பெரியசாமி தேசியக் கொடியேற்றினார். விழாவில் தொடர்ந்து 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய 26 பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவில் போட்டியில் முதல் பரிசு வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர் சஞ்சய் என்பருக்கு சான்றிதழ் வழங்கினார். மேலும் தூத்துக்குடி நகர வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
விழாவில் பொறியாளர் அசோகன், உதவி ஆணையர்கள் சந்திரமோகன், சரவணன், சேகர், ராமசந்திரன், தனசிங், மாநகர அலுவலர் தினேஷ், மாநகர் நல அலுவலர் ரங்கநாதன், சுகாதார ஆய்வாளர்கள் ஸ்டேன்லி பாக்கியநாதன், அரிகணேஷ், ராஜசேகரன், ராஜபாண்டி, மாநகர பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், உதவி செயற்பாெறியாளர்கள் ராமசந்திரன், ஆறுமுகம், காந்திமதி, நாகராஜன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் மண்டல தலைவர்கள் கலைசெல்வி திலகராஜ், அன்னலட்சும் கோட்டுராஜா, பாலகுருசாமி, நிர்மல்ராஜ் உட்பட மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.