சென்னை தண்டையார்பேட்டை கருமாரியம்மன் கோவில் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி குடோனில் மூட்டை மூட்டையாக பதிக்கிவைத்து மாவு மிஸ்ஸின்ல் மாவுடன் ரசானையை பவுடர் அரைத்து போலி குங்குமம், மஞ்சள் போன்றவற்றை விற்பனை செய்வதாக உணவு பொருள் வழங்கும் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், அதிகாரிகளை பார்த்து வேலைசெய்த ஊழியர்கள் தப்பி ஓடினர்.
இதனை அடுத்து 3 குடோனில் சோதனை மேற்கொண்டபோது ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய கூடிய பச்சரிசி, புழுங்கல் அரிசி, போன்ற அரிசிகளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து அடுக்கிவைத்து பின்னர் அரவை இயந்திரம் முலம் அரைத்து அதில் ரசாயன கலர் பொடிகள் கலந்து குங்குமம் மற்றும் மஞ்சள் மற்றும் கோலமாவு பாக்கெட் செய்வதற்காக அரைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள சிறிய கிராமப்பகுதிகளில் கடைகள் மற்றும் நாட்டு மருந்து கடைகளுக்கும் கலர் பவுடர் ரசாயன பாக்கெட் , குங்குமம் மற்றும் கோலமாவுகள் விற்பனை செய்வது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.