ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் 50,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி...பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேச்சு

அதிமுக நிறுவனத் தலைவர், முன்னாள் முதலமைச்சர்எம்.ஜி.ஆர் அவர்களின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்டம் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிட்டி பழனிச்சாமி தலைமையில் வாலிபாளையம் பகுதி கழகம், சூசையாபுரத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்,முன்னாள் அமைச்சர்,பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்,கழகத் தேர்தல் பிரிவு செயலாளர்,திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன், தலைமை கழக பேச்சாளர்கள் வழக்கறிஞர் க.அறிவழகன், ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளருமான சு.குணசேகரன் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி.வி. ஜெயராமன் பேசும்போது கூறியதாவது:

தான் வாழ்ந்த காலம் முழுவதும் தன்னிடத்திலே உதவி கேட்டு வந்தவர்கள் யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் தன்னிடத்தில் இருப்பதை எல்லாம் வாரி வாரி கொடுத்து தன்னுடைய இறப்புக்குப் பிறகும் தான் திரைப்படத்துறையின் மூலம் சம்பாதித்த பெரும் செல்வங்கள், பல்லாயிரம் கோடி மதிப்புடைய அவர் குடியிருந்த நிலப்பரப்பு, அவருடைய சத்யா ஸ்டுடியோ மற்றும் பல்வேறு சொத்துக்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கே உரிமையாக்கி விட்டுச் சென்ற ஒரே தலைவர் இந்திய வரலாற்றிலே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மட்டும்தான். பல தலைவர்கள் மக்கள் நலன், மக்கள் நலன் என்று சொல்வார்கள் ஆனால் அவர்கள் எல்லாம் தங்களுடைய மக்களுடைய நலனையே பெரிதாக கருதி வாழ்ந்த காலத்திலே மக்களுக்காக எதையும் செய்யாமல் தன்னுடைய மக்களுக்காக அனைத்து செல்வங்களையும் தேடி வைத்தார்கள், தேடி வைத்துவிட்டு போயிருக்கிறார்கள். ஆனால் தான் திரைப்படத்துறையின் மூலம் ஈட்டிய செல்வங்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கே கொடுத்து கழகத்திற்கு என்று ஒரு மிகப்பெரிய கட்சி அலுவலகத்தையும் கொடுத்து கழகத்தை இன்றைக்கு வரை, இன்னும் நூற்றாண்டு காலம் இந்த இயக்கம் தமிழக மக்களுக்கு சேவை செய்வதற்கு வழிவகுத்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆவார். அப்படிப்பட்ட அந்த மாபெரும் தலைவருடைய புகழை பேசுவதற்கு ஒரு நாள் போதாது பேசிக் கொண்டே இருக்கலாம். இன்றைக்கும் உலகத்திலேயே எத்தனையோ திட்டங்கள், பல்வேறு பகுதிகளில் மக்கள் நலனுக்காக தொடங்கப்பட்டிருந்தாலும் பச்சிளம் குழந்தைகளுக்காக பள்ளிக்கு வராமல் ஆடு மேய்ப்பதற்கும், கிராமப்புறங்களில் சென்று கொண்டிருந்த குழந்தைகளை எல்லாம் சுவையான உணவு பள்ளியிலே கிடைக்கும் என்று சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு வர வைத்த மாபெரும் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். புரட்சித்தலைவர் எம்ஜிஆருடைய புகழுக்கு ஒரு எடுத்துக்காட்டாக, அவருடைய புகழ் எந்த அளவுக்கு பரவி இருக்கிறது என்பதை நான் தெரிந்து கொண்டேன். ஒருநாள் நான் அமைச்சராக இருந்த பொழுது கர்நாடக மாநிலத்திற்கு பெங்களூர் நகருக்கு சென்றிருந்தேன் அப்போது அங்கே பணியில் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்னிடத்திலே சொன்னார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இல்லாமல் இருந்திருந்தால் நான் இந்த இடத்துக்கு இங்கே வந்திருக்க முடியாது உங்களை சந்தித்திருக்க முடியாது என்று சொன்னார் எனக்கு வியப்பாக இருந்தது, எப்படி சார் நீங்களும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டேன், நான் ராம்நாடு மாவட்டம், என் குடும்பத்தில் எல்லோரும் விவசாயக் கூலிகள், நானும் தோட்டத்திலே ஆடு மேய்த்துக் கொண்டுதான் இருந்தேன் ஆனால் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார் என்கிற ஒரு செய்தியின் காதுகளுக்கு வந்தது அது எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்காக நான் பள்ளிக்கூடம் சென்றேன்.பள்ளிக்கூடத்திற்குள் நுழையாமல் வெளியே ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன் அங்கே போட்ட சாப்பாட்டின் சாம்பார் வாசம் என் மூக்கை தொலைத்தது மறுநாள் நான் பள்ளிக்கூடம் போனேன் படிப்படியாக படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது, ஒருவேளை எம்ஜிஆர் போட்ட உணவை சாப்பிடுவதற்கு பள்ளிக்கூடம் போனவன் நான் தான் இன்றைக்கு எம்ஜிஆர் தயவுலே ஐஏஎஸ் அதிகாரியாக கர்நாடக மாநிலத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னார், அப்படி என்றால் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை போன்ற ஒரு மனிதாபமிக்க தலைவர் இனி உலகத்திலே எத்தனை பேர் தோன்றி இருப்பார்கள் என்பது எண்ணிப் பார்க்க வேண்டும். அதேபோலத்தான் புரட்சித்தலைவி அம்மாவின் உயர்ந்த குணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக ஒன்றை சொல்ல வேண்டும் என்று சொன்னால் ஒரு காலத்திலே புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சரான காலத்திலே பெண் குழந்தைகள் பிறந்து விட்டால் சில மாவட்டங்களில் குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற வறுமை நிறைந்த மாவட்டங்களில் அன்றைய காலகட்டங்களில் பெண் குழந்தைகளுக்கு பிறந்த உடனே தாய்ப்பால் தர வேண்டிய தாயே கள்ளிப்பால் கொடுத்து ஆராரோ பாடி குழந்தைகளுக்கு தூங்க வைத்துக் கொண்டு இருந்தார், அது நிரந்தரமான தூக்கம், மயானத்திற்கு பெண் குழந்தைகளை அனுப்பி வைக்கின்ற சோகமான தூக்கம். பெற்ற தாயே தன் வயிற்றிலே பெண் குழந்தை பெண் பிள்ளை பிறந்து விட்டால் அந்தக் குழந்தைக்கு தன் பாலுக்கு பதிலாக கள்ளிப்பால் கொடுத்த கொடுமையான காலம், பிறந்த பெண் பிள்ளைகளை காப்பதற்கு கொண்டு வந்த தொட்டில் குழந்தைகள் திட்டத்தை பாராட்டுவதற்காக அம்மாவின் இல்லம் தேடி ஓடோடி வந்த அன்னை தெரசா அவர்கள் அம்மாவின் முகத்தை தடவி கொடுத்து என் அன்பு மகளே உன்னை நான் என் சொந்த மகளாக நினைக்கிறேன் என்று பாராட்டி சென்றார்கள், அத்தகைய அம்மா தான் நம்முடைய புரட்சித்தலைவி அம்மா. சத்துணவு திட்டம் கொண்டு வந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அதே போல தொட்டில் குழந்தைகளுக்கு திட்டம் கொண்டு வந்த புரட்சித்தலைவி அம்மா, இவர்கள் இரண்டு பேருடைய வழியிலே இன்றைக்கு சிங்கமாக ஒரு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயிகளுடைய கோரிக்கை, வியாபாரிகளுடைய கோரிக்கை, தொழிலாளினுடைய கோரிக்கை, விவசாய கூலிகளுடைய கோரிக்கை, விவசாய தொழிலாளியுடைய கோரிக்கை இப்படி அரசு ஊழியினுடைய கோரிக்கை இப்படி பலதரப்பட்ட மக்களுடைய கோரிக்கைகளை என்ன என்ன என்பதை அடிப்படையாக உணர்ந்து அவை அனைத்தையும் 4½ஆண்டு காலம் நிறைவேற்றி தமிழக மக்களுடைய நெஞ்சத்திலே இருக்கிற ஒரே துடிப்பு எப்பொழுது மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார் என்பதுதான், அதற்கு விடை தருகிற நாள் தான் பிப்ரவரி 27ஆம் தேதி. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஈரோடு கிழக்கு தொகுதியிலே அண்ணன எடப்பாடியார் காட்டுகிற வேட்பாளர் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார், அதன் பிறகு நடைபெற்றுக் கொண்டிருக்கிற குடும்ப ஆட்சி, கொள்ளைக்கார ஆட்சி, ஏழை எளிய மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, மக்களை ஏமாற்றி மாதம் தாய்மார்களுக்கு உரிமை தொகை என்று பல்வேறு கோரிக்கை, பல்வேறு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் வீட்டுக்கு போகிற நாள் தான் பிப்ரவரி 27, அதன் பிறகு திமுக ஆட்சி விரைவில் வீட்டுக்கு செல்லும் மீண்டும் எடப்பாடியார் ஆட்சிக்கட்டிலே அமருவார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியை எங்கள் அன்பு அண்ணன் எடப்பாடியார் தொடர்வார் என்று பேசினார். மேலும் இந்த வட்டக் கழகத்தினுடைய செயலாளர் ஒரு விபத்திலே உயிர் நீத்த நம்முடைய அன்பு சகோதரர் ஜேம்ஸ் அவருடைய குடும்பத்திற்கு நம்முடைய கழகத்தின் சார்பாக அண்ணன் எடப்பாடியார் அவர்கள் ரூபாய் 3 லட்சம் நிதி வழங்கினார்கள் என்பதை குறிப்பிட்டார்.




இந்நிகழ்வில்,மாவட்டக் கழக அவைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெ.பழனிச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கயம் ஒன்றிய கழகச் செயலாளருமான என்.எஸ்.என்.நடராஜ்,மாவட்ட கழக துணைச் செயலாளர் பூலுவபட்டிபாலு ,பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன்,தென்னம்பாளையம் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான அன்பகம் திருப்பதி, வாலிபாளையம் பகுதி கழக செயலாளர் கேசவன்,நெருப்பெரிச்சல் பகுதி கழக செயலாளர் பட்டு லிங்கம்,காந்திநகர் பகுதி கழக செயலாளர் கருணாகரன்,கொங்கு நகர் பகுதி கழக செயலாளர் பி.கே.எம்.முத்து, முருங்கபாளையம் பகுதி கழக செயலாளர் ஏ.எஸ்.கண்ணன், கோல்டன் நகர் பகுதி கழக செயலாளர் ஹரிஹரசுதன்,வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் சுப்பிரமணியம், தொட்டிபாளையம் பகுதி கழக செயலாளர் வேலுமணி, வெள்ளகோவில் ஒன்றிய கழக செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், வெள்ளகோவில் நகரக் கழக செயலாளர் டீலக்ஸ் மணி,

  மாவட்ட மகளிரணி செயலாளர் சுந்தராம்பாள்,மாவட்ட விவசாய அணி செயலாளர் கலைமகள் கோபால்சாமி, மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் ரத்தினகுமார், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர்.சீனியம்மாள், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் முருகநாதன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் முருகன்,கமல் வரதராஜ், தேவராஜ், தாமோதரன், தனபால், சம்பத், ஜீவானந்தம், பழனிச்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற பொருளாளர் பூபதி, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ஆண்டவர் பழனிச்சாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சிலம்பரசன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ஹரிபிரசாத் உள்பட பலர் பங்கேற்றனர்.

Previous Post Next Post