ஜம்மு காஷ்மீரில் இருக்கு ராஜோரி பகுதியில் 4 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
காஷ்மீரி பண்டிட்கள் சிலர் சமீபத்தில் தீவிரவாதிகள் மூலம் அங்கு கொலை செய்யப்பட்ட நிலையில்தான் அங்கிருந்து பண்டிட்கள் வெளியேறி வருகிறார்கள். நாங்கள் இங்கே 15 வருடமாக வேலை செய்கிறோம். எப்போதும் இவ்வளவு பாதுகாப்பின்றி உணர்ந்தது இல்லை. இப்போது உணர்கிறோம். எங்களால் தொடர்ந்து காஷ்மீரில் வேலை செய்ய முடியாது என்று மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் செய்யும் பண்டிட்கள் கூறியுள்ளனர். அரசு தங்களை பாதுகாக்க தவறிவிட்டதாக கூறி காஷ்மீர் பண்டிட்கள் போராடி வருகின்றனர் இந்த நிலையில்தான் ஜம்மு காஷ்மீரில் இருக்கு ராஜோரி பகுதியில் 4 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 2 தீவிரவாதிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 4 பொதுமக்கள் இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டு உள்ளனர். நேற்று இரவு 7 மணி அளவில் இந்த சமபவம் நடைபெற்று உள்ளது. அங்கு இருக்கும் இந்துக்கள் வீடுகளுக்குள் காட்டு பகுதி வழியாக வந்து இவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். வீட்டிற்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் ஆதார் அட்டைகளை சோதனை செய்துள்ளனர். பெயரை வைத்து அவர்கள் இந்துக்களா என்பதை அடையாளம் கண்டுள்ளனர். இந்துக்கள் என்பதை உறுதி செய்துவிட்டு பின்னர் கொலை செய்துள்ளனர். சரியாக புத்தாண்டு தினத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 10 நிமிடங்கள் விடாமல் இவர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். அப்பர் டாங்கிரி என்ற பகுதிகள் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கிருந்து தப்பி செல்லும் போதும் இவர்கள் சரமாரியாக வீடுகளை நோக்கி சுட்டுவிட்டு சென்றுள்ளனர். இதில் 10 பேர் வரை படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. சதீஷ் குமார் (45), தீபக் குமார் (23), ப்ரீதம் லால் (57), சிஷு பால் (32) ஆகியோர்தான் இந்த தாக்குதலில் கொலை செய்யப்பட்டவர்கள். பவன் குமார் (38), ரோகித் பண்டிட் (27), சரோஜ் பாலா (35), ரிதம் ஷர்மா (17), பவன் குமார் (32) ஆகியோர் இந்த தாக்குதலில் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் அங்கு இருக்கும் இந்துக்களுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இன்று போராட்டம் நடத்த போவதாக இந்துக்கள் அறிவித்து உள்ளனர், இதையடுத்து அங்கு துணை ராணுவ படை குவிக்கப்பட்டு உள்ளது. ராணுவமும் துணை ராணுவமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. சம்பவத்திற்கு காரணமான நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.