ஊர்க்காவல் படைக்கு தேர்வான 39 பேருக்கு பணி நியமன ஆணை: எஸ்பி வழங்கினார்.!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு தேர்வான 39பேருக்கு பணி நியமன ஆணையை எஸ்பி பாலாஜி சரவணன் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு கடந்த 14.12.2022 அன்று ஆள்சேர்ப்பு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு, 21.12.2022 அன்று தேர்வு நடைபெற்றது. அதில் தேர்வான 39 ஊர்க்காவல்படை வீரர்களுக்கு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பணி நியமன ஆணை வழங்கி சிறப்பாக பணிபுரிய அறிவுரைகள் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆயுதப்படை உதவி ஆய்வாளர் நடராஜன், அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர் அந்தோணியம்மாள், உதவியாளர் ஆவுடையப்பன் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post