ஏற்றுமதி ஆர்டர் தருவதாக தூத்துக்குடி தொழிலதிபரிடம் 37 லட்சம் பண மோசடி -நைஜீரிய நாட்டவரை மும்பையில் மடக்கி பிடித்த சைபர் கிரைம் போலீஸ்.!

 

ஏற்றுமதி ஆர்டர் தருவதாக தூத்துக்குடியில் போலியான வாட்ஸ்அப் எண்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் போலியான விளம்பரத்தை பதிவேற்றம் செய்து அதன் மூலம் ஏமாற்றி ரூபாய் 37 லட்சம் பண மோசடி செய்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவரை கைது செய்த சைபர் குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த செலஸ்டின் மகன் பனிமய க்ளாட்வின் மனோஜ் (38) என்பவருக்கு அவரது மொபைலில் வாட்ஸ் அப் மூலம் டோகோவில் இருக்கும் Vetis Animal Health Industry என்ற நிறுவனத்திற்கு மருந்து ஏற்றுமதி செய்ய இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் சர்மா எண்டர்பிரைசஸ் இருந்து பெற்று வெட்டிஸ் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்யுமாறு கேட்டதை நம்பி ரூபாய் 36,98,800/- பணத்தை அனுப்பி ஏமாற்றப்பட்டதாக பனிமய கிளாட்வின் மனோஜ் என்பவர் புகார் அளித்துள்ளார்.

புகார் மனு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேசியஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்து பணத்தை மீட்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்படி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் நைஜீரியா நாட்டை சேர்ந்த இஷி பெடிலிஸ் நுடுபியூஸி (Eze Fidelis Ndubuisi) (42) என்பவர் வாட்ஸ் அப் மூலம் போலியான விளம்பரத்தை பதிவேற்றம் செய்தும் போலியான வாட்ஸ்அப் எண்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் இஷி பெடிலிஸ் நுடுபியூஸி (Eze Fidelis Ndubuisi) என்பவரை மும்பை சென்று மும்பையில் உள்ள உல்வே நோட் என்ற பகுதியில் வைத்து கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் இதுபோல் பல நபர்களை ஏமாற்றி உள்ளதும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்று பலர் இந்த மோசடியில் ஏமாற்றப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கானது தொடர்ந்து விசாரணையில் உள்ளது.

குற்றவாளயை கண்டுபிடித்து கைது செய்த சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் த சிவசங்கரன் தலைமையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post