கோவை, தேனி கலெக்டர்கள் உள்பட 30 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம்!

 தமிழக முழுவதும் 30 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டிருக்கிறது. 


இதில் திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த கிராந்தி குமார் பாடி கோவை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக கடலூர் ரூரல் டெவலப்மென்ட் உதவி கலெகடராக பணியாற்றி வந்த பவன்குமார் கிரியப்பவாணர் நியமிக்கப்படுகிறார். 

சிறுபான்மை நல ஆணைய உறுப்பினர் செயலர் ரவிச்சந்திரன் தென்காசி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராக பணியாற்றி வந்த ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 

தமிழ்நாடு மருத்துவ கழக மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த தீபக் ஜேக்கப் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

விருத்தாச்சலம் சப் கலெக்டராக பணியாற்றி வந்த பழனி விழுப்புரம் மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

சென்னை கன்னியாகுமரி இண்டஸ்ட்ரியல் காரிடர் திட்ட இயக்குனர் ஸ்ரீதர் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

தமிழ்நாடு குடிமை பொருள் கழக இணை மேலாண்மை இயக்குனர் கற்பகம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

செங்கல்பட்டு சப் கலெக்டர் சஞ்சீவனா தேனி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த சாரு ஸ்ரீ திருவாரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

திருவள்ளூர் சப் கலெக்டர் மகாபாரதி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தென்காசி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ஆகாஷ் தொழிலாளர் நலத்துறை துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

விருதுநகர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த மேகநாத ரெட்டி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ஸ்ரீ வெங்கடப்பிரியா ஆசிரியர் தேர்வாணையத்தின் தேர்வு குழு கட்டுப்பாட்டு அதிகாரியாக இணைக்கப்பட்டு இருக்கிறார்.

தேனி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த முரளிதரன் இந்து அறநிலையத்துறை கமிஷனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

திருவாரூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த காயத்ரி கிருஷ்ணன் கோவை வணிகவரித்துறையின் இணை கமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மயிலாடுதுறை கலெக்டராக பணியாற்றி வந்த லலிதா தொழில்நுட்ப கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

நில நிர்வாக துறையின் உதவி கமிஷனராக பணியாற்றி வந்த ஜெயந்தி பள்ளிக் கல்வித் துறையின் சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

சேலம் மேக்னசைட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த கதிரவன் தமிழ்நாடு சாலை பணிகள் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

சென்னை பெருநகர மேம்பாட்டு கழக செயல் அலுவலர் லட்சுமி கால்நடை துறை இயக்குனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

வழிகாட்டு பிரிவின் மேலாண்மை இயக்குனர் பூஜா குல்கர்னி தொழில் முதலீட்டு கழகத்தின் சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மாநிலத் திட்டக் குழுவின் உறுப்பினர் செயலாளர் ராஜசேகர் அரசு திட்டம் மற்றும் மேம்பாட்டு குழுவின் சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வணிகவரித்துறை இணையகுணராக பணியாற்றி வந்த சிவராசு வருவாய் நிர்வாக துறை கமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அரசின் திட்டம் மற்றும் மேம்பாட்டு குழு சிறப்பு செயலாளர் ஹர் சஹாய் மீனா ரூரல் டெவலப்மெண்ட் மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

தொழில்நுட்ப கல்வி ஆணையாளர் லட்சுமி பிரியா ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்து அறநிலையத்துறையின் கமிஷனர் ஆக பணியாற்றி வந்த குமரகுருபரன் அரசின் தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவை பிரிவின் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் உதவி முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்த ஜவகர் தமிழ்நாடு விவசாய நவீனத்துவத் திட்டத்தின் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தேசிய சுகாதார திட்டத்தின் மாநில திட்ட இயக்குனராக பணியாற்றி இருந்த சுப்புலட்சுமி நில நிர்வாக துறையின் இணை ஆணையாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 

பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை கமிஷனர் பிரசாந்த் ரூரல் டெவலப்மெண்ட் மற்றும் பஞ்சாயத்து ராஜ் பிரிவின் உதவி இயக்குனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

விழுப்புரம் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த மோகன் செய்தி மக்கள் தொடர்பு துறையின் இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இது தவிர சில ஐஏஎஸ் அதிகாரிகளின் பொறுப்புகள் வேறு சிலருக்கு மாற்றியும் வழங்கப்பட்டிருக்கின்றன 

Previous Post Next Post