தூத்துக்குடியில் ஜன.25ம் தேதி மின்தடை அறிவிப்பு!

 


தூத்துக்குடியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 25ஆம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி விநியோகம் / நகர் செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடியில் வருகின்ற 25.01.2023 புதன்கிழமை அன்று தூத்துக்குடி 110/22 கே.வி சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால்  அன்று காலை 08.00 மணிமுதல் மாலை 05.00 மணிவரையில் கீழ்காணும் பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: மடத்துர் மெயின் ரோடு, முருகேச நகர், கதிர்வேல் நகர், தேவகி நகர், சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜிவ் நகர், சின்னமணி நகர், 3வது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, EB காலனி, ஏழுமலையான் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலை தொடர்பு குடியிருப்புகள் ராஜகோபால் நகர், பத்திநாதபுரம், சங்கர் காலனி, FCI குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்புரமணிய புரம், கங்கா பரமேஸ்வரி காலனி,

லாசர் நகர், ராஜ ரத்தின நகர், பாலையாபுரம், வி.எம்.எஸ் நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்து நகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், என்ஜிஓ காலனி, அன்னை தெரசா நகர், பர்மா காலனி, TMB காலனி, அண்ணா நகர் 2 வது மற்றும் 3 வதுதெரு, கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகர், புதூர் பாண்டியாபுரம் மெயின் ரோடு, கிருபை நகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரி ராம் நகர், கணேஷ் நகர், புஷ்பா நகர், சி.ஜி.இ. காலனி, லெவிஞ்சிபுரம், லோகியா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post