மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி 22வது ஆண்டு விழா.!

 

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி 22வது ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார். ராதாபுரம் பங்குதந்தை ராபின், நீம் பவுன்டேசன் இயக்குநர் லூயிஸ் ராஜ்குமார், சிலுவைப்பட்டி ஆர்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் ஹெரால்டு வில்சன், ஊர் தலைவர் அந்தோணி ஜேசுராஜன், தாளமுத்துநகர் பள்ளியின் தாளாளர் பங்குதந்தை நெல்சன் ராஜ், உதவி பங்குதந்தை வின்சன்ட், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

10ம் வகுப்பு தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு ஊக்கத்தொகை பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் பரிசு வழங்கி பேசுகையில் மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள் அதே போல் நம்முடைய வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கும் பெற்றோர்கள் ஒரு கண்ணாகவும் அறிவுத்திறனை வளர்ப்பதற்கு தன்னை மெழுகுவர்த்தி போல் உருக்கிகொண்டு வெளிவுலகத்திற்கு வெளிச்சத்தை கொடுப்பதை போல் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றொரு கண்களாகவும் இருந்து வழிகாட்டும் அவர்களை மதித்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தாய்மொழியான தமிழ்மொழியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று பேசினார்.

விழாவில் ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பாலம்மாள், கிளைச்செயலாளர் அன்பு மற்றும் அந்தோணி செல்வராஜ், ஜெயசீலன், கௌதம் உள்பட ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் ஜேக்கப் நன்றியுரையாற்றினார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post