தி பிரண்ட்லைன் செஸ் அகாடமி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் இணைந்து நடத்திய திருப்பூர் மாவட்ட அளவிலான செஸ் போட்டி தி பிரண்ட்லைன் பள்ளியில் நடைபெற்றது.
இதில் காங்கேயம், உடுமலை, தாராபுரம், அவிநாசி, பல்லடம் ஆகிய இடங்களிலிருந்து 200 மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தி பிரண்ட்லைன் பள்ளி தாளாளர் டாக்டர் கே.சிவசாமி பள்ளியின் இயக்குனர் எஸ்.சக்திநந்தன, இணைச் செயலாளர் .வைஷ்ணவி நந்தன், திருப்பூர் மாவட்ட செஸ் பொருளாளர் ஆர்.ராஜேந்திரன் துணைச் செயலாளர் வி.பி.மனோகர் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி போட்டியை தொடங்கி வைத்தனர். இப் போட்டிகள் ஆறு சுற்றுகளாக நடைபெற்றது. போட்டிகள் 9,12,15 வயதுக்குரிய பிரிவில் மாணவ/மாணவியர்களுக்கு தனித்தனி பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெற்றது. இதில் மொத்தம் 60 கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பொது பிரிவில் மொத்தம் 10 பரிசுகளும்10,800 ரொக்க பணமும் வழங்கப்பட்டன.
பொது பிரிவில் ஜெ.மனோ ரஞ்சித் முதல் பரிசையும், மாதவன் இரண்டாவது பரிசையும், எம். வைஷ்ணவ் மூன்றாவது பரிசையும் பெற்றனர். பொது பிரிவில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு சதாசிவம் நினைவு சுழற் கோப்பை வழங்கப்பட்டது.
15 - வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் முதல் பரிசினை மாணவன் எஸ். கிருஷாந்த், இரண்டாம் பரிசினை ஆர்.சிரியாஸ், மூன்றாம் பரிசினை ஆர்.ஸ்ரீ ஹரி ஆகியோர் பெற்றனர். 15 - வயதுக்குட்ப்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்றவர்களுக்கு பிரண்ட்லைன் சுழற் கோப்பை வழங்கப்பட்டது.
15 - வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில் முதல் பரிசினை ஜெ. ஜெஸ்லின் ஜெனிஷா, இரண்டாம் பரிசினை ஆர்.வி.லக்ஷனா பிரிவின்கா, மூன்றாம் பரிசினை கே.ஸ்வேதா ஆகியோர் பெற்றனர்.
9 - வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் முதல் பரிசினை வி.அதிலேஷ், இரண்டாம் பரிசினை வி.அஜீம் ராஜா, மூன்றாம் பரிசினை ஜெ.அட்விக் ஆகியோர் பெற்றனர்.
9 - வயது பிரிவில் முதலிடம் பெற்றவர்களுக்கு எல்.எஸ். நினைவுக் சுழற் கோப்பை வழங்கப்பட்டது.
9 - வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில் முதல் பரிசினை டி.தியானா, இரண்டாம் பரிசினை எம்.குங்கும சாய் சக்தி, மூன்றாம் பரிசினை எம்.வி.சாத்விகா ஆகியோர் பெற்றனர்.
12 - வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் முதல் பரிசினை எம். ஹரிஹரசுதன், இரண்டாம் பரிசினை பி.கவியரசு, மூன்றாம் பரிசினை எஸ்.ஆர்.ஆதிஷ் ஆகியோர் பெற்றனர்.
12 - வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில் முதல் பரிசினை எஸ்.டி.குந்தவை, இரண்டாம் பரிசினை எஸ்.எஸ்.கவி ஹாசினி, மூன்றாம் பரிசினை எஸ்.ரக் ஷனா ஆகியோர் பெற்றனர். மேலும் பிரண்ட்லைன் செஸ் அகாடமி ஹவுஸ் பரிசுகள் வழங்கப்பட்டது. குரு குமரன் - (பிரண்ட்லைன் அகாடமி), பரத் ஆதித்யா - (பிரண்ட்லைன் அகாடமி), ஹர்சன் - (பிரண்ட்லைன் மில்லினியம்), நித்தின் - (பிரண்ட்லைன் மில்லினியம்), விமலன் - (பிரண்ட்லைன் நியூ ஜென்), சஞ்சீவ் ஸ்ரீனிகாஷ் - (பிரண்ட்லைன் நியூ ஜென்) ஆகியோருக்கு செஸ் அகாடமி ஹவுஸ் பரிசுகள் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பிரண்ட்லைன் பள்ளியின் தாளாளர் டாக்டர் கே..சிவசாமி, செயலாளர் டாக்டர் எஸ்.சிவகாமி பள்ளியின் இயக்குனர் எஸ்.சக்திநந்தன் இணை செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் தலைவர்ஆர்.நாகேந்திரன், ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் தலைவர் தேர்வு சுப்பிரமணியம், ரோட்டரி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.