திருவண்ணாமலை திருக்கோவில் உலக அளவில் பிரசித்தி கோவிலாகும். ஆண்டு தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
திருவண்ணாமலையில் கார்த்திகை பவுர்ணமி அன்று தீபத்திருவிழா நடைபெறுகிறது. 2668 அடி உயரம் கொண்ட சிவமாகி நின்ற மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இந்த நாள் கார்த்திகை தீபத் திருவிழா ஆகும். இதை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வீடுகளில் தீபம் ஏற்றி கொண்டாடுகிறார்கள்.
திருவண்ணாமலையில் தீபத்திரு நாளில் பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக தீபத் திருநாள் அன்று கிரிவலம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு இன்று அனுமதி அளித்த நிலையில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கிரிவலம் செல்ல திரண்டனர்.
அதிகாலை முதல் கிரிவலம் சென்று கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் சரியாக 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து கிரிவலம் சென்று கொண்டு இருந்த பக்தர்கள் ஆங்காங்கே தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை ஊர் முழுக்க வான வேடிக்கைகள் முழஙக உற்சாகம் கரை புரண்டது.