தூத்துக்குடியில் பயங்கரம்.! -கொடுக்கல் வாங்கல் தகராறில் கணவன் மனைவி வெட்டி படுகொலை.!

தூத்துக்குடி அண்ணாநகர் 6வது தெருவில் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக லாரி டிரைவர்  ராம்குமார் மற்றும் அவரது மனைவி மாரியம்மாள் (வயது-45) ஆகியோரை இறந்து போன பெண்ணின் உடன் பிறந்த அண்ணனே வெட்டிக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார்(49). இவரது மனைவி மாரியம்மாள்(43). இந்நிலையில், இன்று ( ஞாயிற்றுக்கிழமை) இரவு ராம்குமார் வீட்டுக்கு வந்த மாரியம்மாளின் அண்ணன் முருகேசன் (48 ),  மற்றும் அவரது மகன் மகேஷ்குமார் ஆகியோர் சரமாரியாக வெட்டியதில் மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து ஆவேசத்துடன் சென்ற இருவரும், அண்ணா நகர் 6வது தெரு பள்ளிவாசல் அருகே வந்து கொண்டிருந்த தனது தங்கையின் கணவர் ராம்குமாரையும் படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ராம்குமாரும் சம்பவ இடத்திலேய உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கணவன்-மனைவி இருவரின் சடலங்களைக் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  


கொலைக்கான காரணம் குறித்து நகர டிஎஸ்பி சத்தியராஜ் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்ட ராம்குமார், மாரியம்மாளின் அண்ணன் முருகேசனுக்கு வட்டிக்கு பணம் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது, அதனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், அண்ணாநகரில் உள்ள முருகேசனின் வீட்டை தங்களது பெயருக்கு எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது, மேலும் ரூபாய் 5 லட்சம் சீட்டு எடுத்ததிலும் முருகேசனின் மனைவி பணம் தராமல் ஏமாற்றியதால் , இரு குடும்பத்திற்க்குள்ளும் தகராறு இருந்து வந்த நிலையில், இன்று இருவரும் படு கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிய வருகிறது.

கொலையான ராம்குமார் , மாரியம்மாள் தம்பதிக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் ஒன்றரை வயது கீர்த்திகா எனற பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post