புதுக்கோட்டையில் பட்டியலின மக்களை கோயிலுக்குள் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., அழைத்துச் சென்றபோது எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை: இறையூர் கிராமம் வேங்கைவயல் பட்டியலின மக்களை, மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குள் அழைத்துச் சென்றபோது, சாமி வந்தது போல ஆடி | பட்டியலின மக்களை இழிவாக பேசிய, கோயில் பூசாரியின்| மனைவி சிங்கம்மாள் மீது SC/ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு; அதே ஊரைச் சேர்ந்த அஞ்சப்பன் என்பவர் மீதும் வழக்கு பதியப்பட்டது.
அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறையை கடைபிடித்த கடை உரிமையாளர் மூக்கையா மற்றும் மனைவி மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிங்கம்மாள், மூக்கையா இருவரையும் கைது செய்தனர்.