இமாச்சல பிரதேச தேர்தல்: பாஜக படுதோல்வி.! ஆட்சியை பறித்த காங்கிரஸ்.! - தூத்துக்குடி காங்கிரஸார் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.!

 

இமாச்சலபிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பா.ஜ.கவிடம் இருந்து ஆட்சியை கைபற்றி மாபெரும் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் தபசு மண்டலம் முன்பு பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி காங்கிரசார் கொண்டாடினர். 

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் அருள்,மாநில பொதுக்குழு உறுப்பினர்  சந்திரபோஸ் MC,மண்டல தலைவர்கள் செந்தூர்பாண்டி, ராஜன்,சேகர்,வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல்,கந்தசாமி Ex.MC,மாவட்ட துணை தலைவர்கள் அருணாச்சலம், விஜயராஜ், ஜெபராஜ், மார்க்கஸ், சின்னகாளை,மாவட்ட செயலாளர் கோபால், சேவியர்மிஷியர், வார்டு தலைவர்கள் தனுஷ், மகாலிங்கம், எட்வர்ட்,ஜேக்கப்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post