தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊராட்சி மன்ற அவசர கூட்டம் தலைவர் பிரம்மசக்தி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் மற்றும் வளர்;ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு ஊராட்சி பகுதிகளில் 2022-23ம் ஆண்டு மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து சாலை வசதி, கால்வாய் வசதி, பேவர் பிளாக் சாலை அமைத்தல், பழுதடைந்த பள்ளிக் கட்டிடம் சீரமைத்தல், அங்கன்வாடி புரனமைப்புப் பணிகள் என பல்வேறு வளர்ச்சிப் பணித் திட்டங்கள் நிறைவேற்றுவதற்கு ரூ.3 கோடியே 56 இலட்சத்து 80 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி செயலர் மற்றும் மாவட்ட திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ, மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலெட்சுமி சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அருண் குமார், சத்யா, செல்வகுமார், ஞானகுருசாமி, அழகேசன், தங்கக்கனி, தங்க மாரியம்மாள், தேவராஜ், தேவவின்னரசி, நடராஜன், பாலசரஸ்வதி, பிரியா, பேச்சியம்மாள், மிக்கேல் நவமணி, ஜெஸி பொன்ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.