நாக்பூரில் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் தேசிய சப் ஜூனியர் சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டிற்கு தமிழக அணியின் சார்பில் தூத்துக்குடி எஸ். ஏ .வி. மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் கோபி லட்சுமணன் தேர்வாகி உள்ளார். மாணவனை, பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியர் R. கிருபை வேல்முருகன் , மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டி வாழ்த்தினார்கள்.
இந்நிகழ்வில் பள்ளி மாணவனை பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் K. குப்புசாமிக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.