திருவொற்றியூர் : சென்னை எண்ணூர் ராமருஷ்ணா நகர் கடற்கரை பகுதியில் பொழுதை கழிப்பதற்காக குளித்து கொண்டிருந்த போது அலையில் சிக்கி மாயமான 4 வட மாநில தொழிலாளர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் உத்திர பிர தேசத்தை சேர்ந்த சுமார் 23 வடமாநில தொழிலாளர்கள் கடலில் குளிக்க சென்றுள்ளனர். அதில் நால்வர் ராட்சத அலையில் சிக்கி மாயமாகி உள்ளனர்.
எண்ணூர் ஆண்டாள் குப்பம் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் நிருவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணி புரிந்து வரும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த 23 தொழிலாளிகள்
அதில் நால்வர் ராட்சத அலையில் சிக்கி மாயமாகி உள்ளனர். எண்ணூர் ஆண் டாள் குப்பம் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் நிருவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணி புரிந்து வரும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த 23 தொழிலாளிகள், விடுமுறை தினமான நேற்று பொழுதை கழிப்பதற்க்காக கடற்பகுதிக்கு வந்துள்ளனர்.
அப்போது 8 பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென உருவான ராட்சத அலையில் சிக்கி 4 பேர் மாயமாகினர். மீதமிருந்த 4பேரும் கரைக்கு திரும்பியுள்ளனர். கரைக்கு திரும்பியவர்கள் எண்ணூர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கவே காவல் துறையி னர் எண்ணூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
கடல் அலையில் சிக்கி காணமல் போயிருக்கும் முஸ்தகின் (22), இப்ராஹிம்(22), வஷீம்(26), புர்சான்(28) ஆகிய நால்வரையும் மீட்கும் பணியை எண்ணூர் தீயணைப்பு துறையினர் மற்றும் திருவொற்றியூர் தீயணைப்பு துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இவர்களோடு சேர்ந்து மெரினா நீச்சல் வீரர்களும் அப்பகுதியை சார்ந்த மீனவர்களும் தேடி வருகின்றனர். ஏற்கனவே இந்த பகுதியில் பலமுறை இது போன்று கடலில் குளிக்க சென்றவர்கள் அலையில் சிக்கி மாயமாகி யுள்ளனர். போலிசார் அவ்வபோது எச்சரிக்கை பதாகைகள் வைத்தும் ரோந்து பணியில் ஈடுபட்டும் கூட இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகிறது.