சத்தியமங்கலம் வனக் கோட்டம், கடம்பூர் வனச்சரகத்தில், மூலக்கடம்பூர், நடூர், கொளிஞ்சி மரத்தூர், ஏரியூர், கல் கடம்பூர், பூதிக்காடு, செங்காடு, புலிப்போன் காடு ஆகிய வனப்பகுதி கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட சிறு-குறு விவசாயிகள் மக்காச் சோளம், மரவள்ளி போன்ற பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். இவ் விவசாயிகளின் வாழ்வாதாரமே இவ் விவசாயம்தான். சமீப காலமாக வனத் திலுள்ள யானைகள் விளை நிலத் திற்குள் புகுந்து பயிர்களுககு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது இப் பகுதிகளில் யனை புகா அகழி (EPT)ஏதும் இல்லை, மேலும், யானைகள் பயிருக்கு சேதத்தை ஏற்படுத்தும் போது அவை களை விரட்ட வனத்துறை பணியாளர் களும் ஆர்வத்தோடு ஒத்துழைப்ப தில்லை. ஆகவே இக்கிராமங்களில் யானைகள் புகுவதை தடுக்க, சுமார் 2,600கி.மீட்டர் தூரத்திற்கு யானை புகா அகழியை(EPT), குறைந்த மின் அழுத்த மின்வேலியோடு அமைத்து தர தாங்கள் உடனடி நடவடிக்கைகளை எடுத்து உதவ வேண்டுகிறோம்.
மேலும் கடம்பூர் வனச் சரக பணியாளர் கள் விவசாயிகள் உதவி க்கு அழைக்கும் போது,காலந்தாழ்த்தா மல் வந்து உதவிட அறிவுறுத்தவும் வேண்டி,, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் கடம்பூர் ராமசாமி தலைமையில் மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கரிடம் மனு அளித்தனர்.