தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள ஊராட்சி பகுதிகளில் சொத்துவரி நிர்ணயம்.! - மாநகராட்சி மேயர் புதிய அறிவிப்பு.!

 

இது குறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்..

தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள ஊராட்சி பகுதிகளில் குறிப்பாக வார்டு எண்கள் 1.2.3.14.15.16.17.18. 48,50,51,52,53,55.57.60 ஆகியவற்றில் அமைந்துள்ள கட்டிடங்களுக்கு ஊராட்சி மூலம் ஏற்கனவே சொத்துவரி நிர்ணயம் செய்யப்பட்டு தொடர்ச்சியாக சொத்துவரி செலுத்தாததின் காரணமாக மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட சமயத்தில் கணினியில் பதிவேற்றம் செய்ய விடுபட்டுள்ளது.

மேற்படி கட்டிடங்களின் உரிமையாளர்கள் மாநகராட்சியைத் தொடர்பு கொண்டு சொத்து வரிவிதிப்புகளை உறுதி செய்திடும் வகையில் ஊராட்சி சொத்துவரி ரசீது, பத்திரம்,பட்டா போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க போதிய அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் மேற்படி பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்கள் பலவற்றிற்கு சொத்துவரி நிர்ணயம் செய்யாமல் இருப்பது தொடர்பாக பொதுமக்கள். வணிக நிறுவனங்கள். சமூக ஆர்வலர்கள். உள்ளாட்சி பிரநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது. இதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலர் மற்றும் பணியாளர்களின் நேரடி ஆய்வின்போது வரிவிதிப்பு எண்கள் பெறப்படாதது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எனவே மேற்படி குறைகளை நிவர்த்தி செய்து ஒழுங்குபடுத்தும் விதமாக சொத்துவரி நிர்ணயம் செய்வதன் பொருட்டு பொது மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் எளிதில் பெறும் வகையில் வாய்ப்பு அளிக்கும் விதமாக மாநகராட்சிக்கான சொத்துவரி எண் இதுவரை பெறாதவர்கள் தங்கள் பகுதிக்கான மண்டல அலுவலகங்களை உரிய ஆவணங்களுடன் தொடர்பு கொள்ள 31.12.2022 வரை கால அவகாசம் சிறப்பினமாக வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post