தன்னைப்போலவே முஷ்டி உயர்த்தி முழங்கும் உக்கிரம்மாள் ஒருவரை இப்போதெல்லாம் தங்கை என்று அழைப்பதில்லையாம் அண்ணன். விஷயத்தைக் கேள்விப்பட்ட அண்ணியார் கட்சிக்குள்ளேயே தனக்கு விசுவாசமான பெண்ணொருவரிடம் உக்கிரம்மாளைக் கண்காணிக்கும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்.
விஷயத்தை ஊகித்த எதிர்த்தரப்போ. யாரை யார் வேவு பார்ப்பது? வீட்டில் தான் அவர் உனக்குச் சொந்தம் வெளியில் வந்துவிட்டால் எனக்கே சொந்தம் என்று உஷ்ணமாகியிருக்கிறது. கத்திரிக்காய்கள் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும்.
- குமுதம் ரிப்போர்ட்டர்