தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நீர் வழி ஓடையில் அமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பினை அகற்ற வேண்டும்.. மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மட்டுமின்றி நீர்வரத்து ஓடை மீட்பு குழு போராட்டத்தில் ஈடுபட்டனர். 5வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி, நீதிமன்றம் செல்லபோவதாக அறிவித்தார்.
நிச்சயமாக நீர்வரத்து ஓடையில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உறுதி அளித்து இருந்தார்.
இதையடுத்து இன்று காலையில் கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமையில் தாசில்தார் சுசிலா, டி.எஸ்.பிகள் லோகேஸ்வரன், சிவசுப்பு , ஆய்வாளர்கள் சுகாதேவி, பத்மாவதி மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.