கோரம்பள்ளத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்தை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி துவக்கி வைத்தார்.

 

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கோரம்பள்ளம் பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டுமென்று மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளருமான அருண்குமாரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். 

இதனையடுத்து, கோரம்பள்ளம் பி.எஸ்.பி.நகரில்  2020-2021ம் ஆண்டு 15வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்திலிருந்து ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் 1000 லிட்டர் கொள்ளளவு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யும் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. 

இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளருமான அருண் குமார் தலைமை வகித்தார். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் முன்னிலை வகித்தார். கோரம்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வபிரபா அதிசயராஜ் வரவேற்புரையாற்றினார். 

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து இனிப்பு வழங்கினார். 

விழாவில் கோரம்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பொன்மாரி செல்வராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், ஆரோக்கியராஜ், பாக்கியம், வினோதா, மேரி செல்வமணி, மீனாட்சி, மாரிமுத்து, ஞானகண், தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பா சங்கர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

Ahamed

Senior Journalist

Previous Post Next Post