சத்தியில் டிஎஸ்பி ஆபிசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை-பரபரப்பு.


சத்தி டி.எஸ்.பி ஆபிசை இந்திய கம்யூ கட்சியினர் முற்றுகையிட்டு போரட்டம் நடத்தியதால் பரபரப்பு காணப்பட்டது. சத்தி - மைசூர் தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ள சத்தியமங்கலம் காவல் உட்கோட்ட (டி.எஸ்.பி) அலுவலகத்தை, பவானிசாகர், புளியம்பட்டி பகுதிகளில், அரசியல் அமைப்பு, மதசார்பின்மை மாநில உரிமைகளுக்கு எதிராக  செயல் படும், தமிழக கவர்னரை திரும்ப பெறக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் டிசம்பர் 29 தேதி  சென்னை யில் ஆளுநர் மாளிகையை முற்றுகை யிட்டு நடைபெறும் போரட்டம்பற்றி,பொது மக்களுக்கு விளம்பரப்படுத்த, பவானி  சாகர் தொகுதி முழுவதும், பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. ஆங்காங்கேசுவர் விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களை உடனடியாக அகற்றுமாறு தாளவாடி, ஆசனூர், கடம்பூர், சத்தியமங்கலம், புளியம்பட்டி, பவானிசாகர் ஆகிய ஆறு காவல்நிலையங்களில் இருந்து, உள்ளா ட்சி அமைப்புகளுக்கு கடிதம் அனுப்பபட்டு இந்த போஸ்டர்களை போலீஸாரின் தூண்டுதலின் பேரில்,நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் கிழித்து உள்ளனர். மேலும் சுவரொட்டிகளை ஒட்டிய கட்சி நிர்வாகிகள் மீது வழக்கும் போடப்பட்டுள்ளது.

போலீஸாரின் இச் செயலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் சத்தி டிஎஸ்பி ஆபிசை முற் றுகையிட்டு, போரட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது. போரட்டத்தில் ஈடு பட்டவர்கள் முழககங்கள் எழுப்பியதால், அதிகாரிகள் போராட்த்தில், ஈடுபட்டவர் களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதில் உடன் பாடு ஏற்பட்டதையடுத்து, போரட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போரா ட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டசெயலாளர் மோகன் குமார், மாவட்டக்குழு உறுப்பினர் ஸ்டா லின் சிவக்குமார், துணைச் செய லாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், சத்தி நகர செயலாளர் ஜமேஷ், சத்தி தெற்கு ஒன்றிய செய லாளர் நட ராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் சுரேந்தர், பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் வேலுமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள்கலந்து கொண்டனர். 
Previous Post Next Post