ரயில் பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டி.டி.ஆர். சேரன் சூப்பர் பாஸ்ட் ரயிலில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து கோவை வரை செல்லக்கூடிய சேரன் சூப்பர் பாஸ்ட் ரயிலில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு வயது குழந்தை உட்பட ஒன்பது நபர்கள் 29.12.2023 சென்னையில் இருந்து பயணித்து வந்தனர். இதில் மூன்று நபர்களுக்கு மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியும் (B6), மீதம் உள்ள நான்கு நபர்களுக்கு முன் படுக்கை வசதி கொண்ட(S1) பெட்டியில் பயணித்தனர். 6 வயது சிறுவனுக்கு டிக்கெட் கிடைக்காததால் ஏசி வகுப்பில் சிறுவன் அவனது தாயாருடன் பயணித்து வந்தான். இதையடுத்து டிடிஆரிடம் இருந்து சிறுவனுக்கு டிக்கெட் பெறப்பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 நபர்கள் பயணித்து வந்த நிலையில் மருத்துவர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஏசி பெட்டியில் பயணிக்க இயலாததால் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது பெண் குழந்தையை ஏசி பெட்டியில் பயணித்து வந்தார். ஆரம்பம் முதலில் டி.டி.ஆர். அந்த குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வந்த நிலையில் நள்ளிரவு 12:30 மணியளவில் மீண்டும் அந்த குடும்பத்தினரிடம் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார், 11 வயது சிறுமிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர் இருக்க வேண்டும், இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று கூறியும் டிடிஆர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் பயணிகளிடம் கடினமாக பேசியுள்ளார், இதை அறிந்த சக பயணிகள் டி.டி.ஆரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு பிற கோச்சிலுள்ள டி.டி.ஆர்களும் வந்து சமரசம் செய்ய முயற்சித்த போதிலும் B6 பெட்டியில் உள்ள டிடிஆர் சமரசம் ஆகாமல் அந்த குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து 11 வயது சிறுமி முன்பதிவு செய்யப்பட்ட சாதா படுக்கை வசதி பெட்டிக்கு சென்றார். ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பெட்டி மாறியதற்கு கடினமாக பேசியது ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அந்த குடும்பத்தினர் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளனர். ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பாகவும், நண்பனாகவும் இருக்க வேண்டிய டி.டி.ஆரின் இச்செயல் ரயில் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழாதவாறு ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையையும் வைக்கப்பட்டுள்ளது. B6 கோச்சில் வந்த டிடிஆர் பெயர் சொல்ல மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.