ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சி நகர்மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் ஆர் ஜானகி ராமசாமி தலை மையில்,நகராட்சி ஆணையாளர்(பொ) பொறியாளர் ரவி மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் நடராஜ் முன்னிலை யில் நடைபெற்றது. கூட்டத்தில் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 22வது வார்டு நகர் மன்ற உறுப் பினர் லட்சுமணன் தனது வார்டு க்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் நகராட்சி பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப் படுமா? என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்த, நகர் மன்ற தலை வர், நகராட்சி பகுதியிலுள்ள, ஆக் கிரமிப்பு பகுதிகளை அலுவலர் கள் ஆய்வு செய்து உரிய நடவடி க்கை மேற்கொள்வார்கள் என தெரிவித்தார். 23வது வார்டு கவுன் சிலர் அரவிந்த் சாகர்,நகராட்சி சமுதாயக் கூடம் திருமண உபயோகத்திற்கு பயன்படுத்துவதில்லை எனவும்,, அதை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண் டு வர வேண்டும் எனகோரிக்கை விடுத் தார்.இதற்கு பதில் அளித்த நகர மன்ற தலைவர் மற்றும் பொறியாளர் நகரப் பகுதி பொது மக்கள்,திருமண பயன்பாட்டுக்கு யாரும் கேட்கவில்லை என்றும், ஏற்கனவே அது தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டு, நகராட்சிக்கு வருவாய் ஈட்டி தரும் நிலையில்,தங்கள் கோரிக்கையை பரிசீலித்து, சமுதாய கூடம கட்டுவதற்கு தகுந்த இடம் தேர்வு செய்து, சமுதாயக்கூடம் கட்ட ஏற் பாடு செய்யப்படும் என தெரிவித்தனர்.நகர் மற்றும் உறுப்பினர் வேலுசாமி, சத்திய மங்கலம் நகராட்சி, புளியங்கோம்பை பகுதியில், 58 ஏக்கர் நிலம் அரசு தரிசு நிலம் உள்ளது. அப்பகுதி யில் நகராட்சி சார்பில், பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்க முன்வர வேண்டும் எனக் கேட்டார்.இதுக்கு பதில் அளித்த நகர் மன்ற தலைவர் ஜானகி ராமசாமி, இந்த பகுதியில், பத்து ஏக்கர் நிலம் நகராட்சிக்கு ஒதுக்கி தர வருவாய்த் துறைக்கு அனுமதி கேட்டு,கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் திருநாவுக்கரசு, கடந்த ஒரு வருட காலமாக தனது வார்டு க்கு உட் பட்ட பகுதியில், எவ்வித பணி களும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டினார்.இதுக்கு பதில் அளித்த நக ராட்சி பொறியாளர் அனைத்து பகுதி களிலும், வார்டு வாரியாக பணிகள் நடைபெற்று வருவதாகவும்,விரைவில் தங்கள் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் துவங்கபடும் என தெரிவித்தார்.பாஜக உறுப்பினர் உமா, நகர் மன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்னால்,தமிழ் தாய் வாழ்த்து பாடலாமே எனவும், சத்திய மங்க லம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் யாராவது ஒருவர் சிலை வைக்கபடுமா? என கேள்வி எழுப்பினார்.நகர்மன்ற தலைவர் இது குறித்து, ஆலோசிக்கப் படும் என தெரிவித்தார்.பாட்டாளி மக்கள் கட்சி கவுன்சிலர் புவனேஸ்வரி தனது வார்டுக்குபட்ட பகுதியில்,கழிப்படம் மிகவும் பழுதடைந்து நிலையில் காணப்படுவதாகவும்,அதிகாரி கள் ஆய்வு செய்த நிலையில் அது பராமரிக் கப் படுமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த, நகராட்சி பொறி யாளர் ரவி,கழிப்பிடம் மிகவும் பழுதடை ந்து காணப்படுவதால்,புதிய கழிப்பிடம் கட்ட ஆவணம் செய்யப்படும் என தெரிவித்தார். .தற்போது தோப்பூர் மற்றும் அண்ணா நகர் பகுதியில், பணிகள் நடைபெற்று வருவதாகவும், அங்கு பணிகள் முடிந்த முன் இங்குபணிகள் துவக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் பா.ம.க. கவுன்சிலர் புவனேஸ்வரி தனது பகுதியில், தெருவிளக்கு சரிவர எரிவதில்லை எனவும் புகார் தெரிவித் தார்.இதற்கு நகர் மன்ற தலைவர் ஜானகி ராமசாமி விரைவில் எரியாத தெரு விளக் குகள் மாற்றி அமைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
.