தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நட்டி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன்பெரியசாமி வழங்கினார்கள்.
தூத்துக்குடி மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு 14வது வார்டுக்குட்பட்ட சின்னகன்னுபுரம் பாரதிநகரில் நடைபெற்ற விழாவிற்கு மாநகர திமுக துணைச்செயலாளரும் மாநகராட்சி பணிக்குழு தலைவருமான கீதாமுருகேசன் தலைமை வகித்தார். 45வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் அப்பகுதியில் 45 மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தொடங்கி வைத்தது 300 பேருக்கு சேலை, நலத்திட்ட உதவிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினார்கள்.
விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் முத்துராமன், வார்டு அவைத்தலைவர் அந்தோணிமுத்து, வட்டப்பிரதிநிதிகள் முருகேசன், குமார், தங்கமாரியப்பன், முனியசாமி, ஆல்கன் டிரஸ்ட் நிர்வாகிகள் செந்தில், ஐயப்பன், கேசவன், வேல்பாண்டி, தினேஷ்குமார், ரகுபதி, நாராயணன், கமல் தனசேகரன், மகேஸ்வரசிங், ஊனமுற்றோர் நலச்சங்க தலைவர் மருதபெருமாள், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, கருணா, பிரபாகர், பாஸ்கர், ரமேஷ், மகளிர் அணி சீதாலட்சுமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.