தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்தாய்வு.!

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாதம் ஒருமுறை பொதுமக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் மூலம் நிறைவேற்றப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றனர். 

அதே போல் சில திட்டங்கள் உடனடியாக செய்வதற்கு மாநகராட்சி அவசர கூட்டம் மூலமும் நிறைவேற்றப்பட்டு நடைபெறுகின்ற பணிகளை மாநகராட்சி மேயர் ஆணையர் அதிகாரிகள் தொடர்ந்து பார்வையிட்டு நல்ல முறையில் பணிகளை முடிப்பதற்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். 

மாநகராட்சி மண்டல தலைவர்களாக உள்ளவர்களுக்கு தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு என பிரிக்கப்பட்டு நான்கு மண்டலத்தலைவர்களுக்கும் அலுவலகமும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஓரு உதவி ஆணையர் உதவி செயற்பொறியாளர் சுகாதார ஆய்வாளர்கள் என பலர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்டேட் பேங்க் காலணி பகுதியில் உள்ள வடக்கு மண்டல அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்களுடன் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்க்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள மற்றும் நடைபெற இருக்கும் பணிகள்  குறித்தும், புதிய வடிகால் வசதிகள், மற்றும் புதிய சாலைகள் அமையப் பகுதிகளையும் குறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்தாய்வு செய்தார்.

ஆலோசனையின் போது வடக்கு மண்டல  தலைவர்  நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், தெய்வேந்திரன், ரெங்கசாமி, ஜாக்குலின் ஜெயா, மரியசுதா அந்தோனி, அந்தோனி பிரகாஷ் மார்ஷலின், பவானி மார்ஷல், சுப்புலெட்சுமி, கற்பகனி சேகர், பத்மாவதி செண்பகசெல்வன், ஜெயசீலி, நாகேஸ்வரி, உதவி ஆணையர் தனசிங், உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ், சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் பிரபாகர், ஜோஸ்பர், உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post