நீர்வரத்து ஓடையில் பாலம் கட்டுவதை கண்டித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்.!

 

கோவில்பட்டியில்  ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நீர்வரத்து ஓடையை ஆக்கிரமித்து நிரந்தரமாக பாலம் அமைக்கப்படுவதை கண்டித்து நீர்வரத்து ஓடை மீட்பு குழுவினர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் நீர்வரத்து ஓடை மீட்பு குழு செயலாளர் க.தமிழரசன் , விடுதலைச் சிறுத்தைகள் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின்,நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் ரவிக்குமார், நகரச் செயலாளர் மகாராஜன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கத்தின் நிறுவனர் செல்லத்துரை என்ற செல்வம், ஐ என் யூ சி மாவட்ட பொதுச் செயலாளர் ராஜசேகரன், கருத்தரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு கருப்பசாமி, பகத்சிங் ரத்ததான கழக அறக்கட்டளை காளிதாஸ், பாண்டியனார் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் சீனி ராஜ் ,இரட்டைமலை சீனிவாசனார் இயக்க நிர்வாகி செல்வகுமார், சமூக ஆர்வலர் ராஜேஷ் கண்ணா , புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலாளர் தாவீது ராஜா, கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

தொடர்ந்து தங்களது கோரிக்கை மனுவினையும் கோட்டாட்சியர் மகாலட்சுமிடம் வழங்கினர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post