மதவாத கட்சியாக ஒரு கட்சி செயல்படுவதை அனுமதிக்க முடியாது.!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!

 

மதச்சார்பின்மை என்பது நமது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை; அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை மீறப்படுவது ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது

மதவாத கட்சியாக ஒரு கட்சி செயல்படுவதை அனுமதிக்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மதசார்பற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். பழம்பெருமைகள் மீது பற்று கொண்டவர்கள்தான் ஆனால் பழமைவாதிகள் அல்ல. அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் அடிப்படையில் தான் பழம்பெருமைகளை நாங்கள் பேசுகிறோம் என்று தெரிவித்தார்.




Ahamed

Senior Journalist

Previous Post Next Post