கோவில்பட்டி அருகே தெரு விளக்கு எரியவில்லை என மனு அளித்த ஒரு வாரத்தில் விளக்கையே அகற்றிய அதிகாரி..!

 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தோனுகால் பஞ்சாயத்திற்குகுட்பட்ட படர்ந்தபுளி கிராமம் கீழ தெரு பகுதியில் பட்டியிலினத்தை சார்ந்த வர்களும் , அருந்ததியர் இன மக்களும் வசித்து வருகின்றனர். அப்பகுதி  தெரு முகப்பில் உள்ள மின் கம்பத்தில் பெரிய மெர்குரி விளக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அமைக்கப்பட்டது. பத்து நாட்கள் மட்டும் எறிந்த நிலையில் பின்னர் பல மாதங்களாக  எரியாமல் இருந்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி ஒன்றியக்குழு சார்பில் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் தலைமையில்  வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ) சீனிவாசனிடம்  கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் தேதி அன்று பழுதடைந்த மின்கம்பதை நீக்கி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும், நீண்ட நாட்களாக எறியாமல் உள்ள தெரு விளக்கை சரி செய்ய வேண்டும், மயான கொட்டகை அமைத்துக் கொடுக்க வேண்டும், சாலை வசதி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு  அளித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக பழுதடைந்த மின் கம்பத்தை நீக்கி விட்டு புதிய மின் கம்பத்தை வைத்து விட்டு அதில் இருந்த விளக்கினை தற்போது அகற்றி சென்று விட்டனர். 

இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர்  தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சிபிஎம் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post