மகளின் ஆபாச வீடியோவை வெளியிட்டவர்களை கண்டித்த ராணுவ வீரரை அடித்து கொலை செய்த வழக்கில் பெண்கள் உட்பட 7 பேரை குஜராத் மாநில போலீசார் கைது கைது செய்தனர்.
குஜராத்தில், தன்னுடைய மகள் தொடர்பான ஆபாச வீடியோவை அச்சிறுமியின் சக மாணவன் வெளியிட்டுள்ளான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரின் மகளின் ஆபாச வீடியோவை, சக்லசி கிராமத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் வெளியிட்டுள்ளான். இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியும், சம்பந்தப்பட்ட சிறுவனும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், தன் மகள் தொடர்பான ஆபாச வீடியோ வெளியிட்டதால் கோபமடைந்த பாதுகாப்புப் படை வீரர் அன்றிரவே தன்னுடைய மனைவி, இரண்டு மகன்களுடன் நேராக அந்த சிறுவனின் வீட்டுக்கு சென்று கேட்டுள்ளார்.
அப்போது இரு குடும்பத்தாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், சிறுவனின் குடும்பத்தினர் தாக்கியதில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். இதனை எல்லைப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து இரண்டு பெண்கள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்