தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூபாய் 11,500/- பணம் மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை தலைமையில் பயிற்சி உதவி ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் போலீசார் நேற்று (27.12.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யனார்குளம்பட்டி பகுதியில் உள்ள அம்மன் கோவில் அருகே அதே பகுதியைச் சேர்ந்தவர்களான லட்சுமணன் மகன் பூல்பாண்டி (38), பால்சாமி மகன் பாலகிருஷ்ணன் (40), முருகன் மகன் கண்ணன் (29), இசக்கிமுத்து மகன் பரமசிவன் (39), சங்கரன் மகன் கணேசன் (58), செய்துங்கநல்லூரைச் சேர்ந்தவர்களான இசக்கி மகன் பரமசிவன் (42) மற்றும் ஆறுமுகபாண்டி மகன் வடிவேல்முருகன் (34) ஆகிய 7 பேரும் சேர்ந்து சட்டவிரோதமாக பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் மாரியப்பன் வழக்குபதிவு செய்து மேற்படி எதிரிகள் 7 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 11,500/- பணம் மற்றும் சீட்டுக்கட்டுகளையும் பறிமுதல் செய்தார்.