மறைந்த தமிழக முதல்வர் ஜெ-யின் 6ம் ஆண்டு நினைவு தினம் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. சண்முகநாதன் தலைமையில் மௌன அஞ்சலி ஊர்வலம். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ-யின் 6ம் ஆண்டு நினைவு தினம் அதிமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது. அதன் படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மௌன ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் ராஜாஜி பூங்கா முன்பு ஜெ-க்கு அஞ்சலி செலுத்திவிட்டு ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர்கள் அணிவகுக்க ஊர்வலம் புறப்பட்டு தூத்துக்குடி முக்கிய வீதி வழியாக பழைய மாநகராட்சி வளாகத்தை அடைத்தது. அங்கு அலங்கரிக்கப்பட்ட ஜெ-யின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் வலையம் வைத்து பூஜை செய்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என். சின்னதுரை, மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் இரா.ஹென்றி, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் வக்கில் பிரபு, ஒன்றியச் செயலாளர்கள் இராமச்சந்திரன், காசிராஜன், விஜயகுமார், ராஜ்நாரயணன், சௌந்தரபாண்டி, தாமோதரன், ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், செரினா, மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வீரபாகு, கொறடா வக்கீல் மந்திர மூர்த்தி, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, பகுதி கழகச் செயலாளர் பொன்ராஜ், ஜெய்கணேஷ், முருகன்,
முன்னாள் துணை மேயர் சேவியர், நட்டார்முத்து, சார்பு அணி செயலாளர்கள் வக்கீல் யு.எஸ்.சேகர், டேக் ராஜா, நடராஜன், பில்லா விக்னேஷ், ஜெ.ஜெ.தனராஜ், கே.ஜே.பிரபாகர், அருண்ஜெபக்குமார், டார்சன், சுதர்சன்ராஜா, அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டல செயலாளர் கல்விக்குமார், நகர கழக செயலாளர்கள் மகேந்திரன், காயல் மௌலானா, பேரூராட்சி கழக செயலாளர்கள் காசிராஜன், செந்தில்ராஜகுமார், ரவிச்சந்திரன், வேதமாணிக்கம், துரைச்சாமி ராஜா, அசோக்குமார், செந்தமிழ்சேகர், ஆறுமுகநயினார், கிங்சிலிஸ்டார்லின், சோமசுந்தரம், குமரகுருபரன், கோபாலகிருஷ்ணன், எரோமியாஸ், முன்னாள் எம்பி நட்டர்ஜி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் ஜோதிமணி, சத்யாலெட்சுமணன், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் கோமதிமணிகண்டன், ஆண்ட்ருமணி, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் தட்டார்மடம் ஞானப்பிரகாசம், முன்னாள் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் திருமணவேல், திருச்சிற்றம்பலம், வக்கில் முனியசாமி, செங்குட்டுவன், சரவணப்பெருமாள், உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா திருவுருப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் பலரும் கருப்பு நிறஆடை அணிந்திருந்தனர்.