தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பழைய மாணவர்கள் ஒருங்கிணைந்த 5 வது குடும்ப விழா. !

 

தூத்துக்குடி : காயல்பட்டினம் அருகில் வீரபாண்டியன் பட்டினத்தில் உள்ள பியர்ல் கார்டன் ரிச்சர்ட் நிகழ்ச்சி அரங்கில் வைத்து பள்ளி தோழர்கள் குடும்பத்துடனும் ஆசிரியர்களுடனும் இணைந்து அன்பை பகிர்ந்து கொள்ளும் குடும்பவிழா சந்திப்பு நடைபெற்றது.

தூத்துக்குடியில் பழமை வாய்ந்த பள்ளியாக காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 1972-1974ம் வருடத்தில் கல்வி பயின்ற பழைய மாணவர்கள் இணைந்து 5வது குடும்ப விழா சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த விழாவிற்கு இப்பள்ளியில் பயின்ற பழைய மாணவர் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும் தற்போது அரபிக் கன்ஸ்ட்ரக்சன் மேனேஜிங் டைரக்டரும் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தக்காரரான ஹாஜி மீராசா முன்னிலை வகித்தார். கோவை பிரபாதம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தாளாளர் மகாவிஷ்ணு தலைமை உரையாற்றினார். 

கௌரவ விருந்தினர்களாக பியர்ல் சிட்டி நிதி நிறுவன சேர்மன் லயன் சூரியமூர்த்தி, சாண்டி கல்வி குழுமம் சேர்மன் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.தொழில் அதிபர் மங்களவேல் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ராஜாசிங், ராமசாமி, மீனாட்சிசுந்தரம், ஜெயக்குமார், கந்தசாமி (எ) ஜான்பிரின்ஸ், ராஜசேகரன், மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், நாகராஜன், பிரபாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தூத்துக்குடி வக்கீல்  செல்வராஜ் மற்றும் சுரேஷ்குமார் நன்றியுரையாற்றினார். 

ஒருங்கிணைப்பாளர் சுப்புராஜ், இணை ஒருங்கிணைப்பாளர்கள் சிவலிங்கம்இ சுந்தரவேல், இராமமூர்த்தி, ராஜசேகரன், சுரேஷ்குமார் ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். 

இந்த விழாவில் 1972-1974 வருட பள்ளி பழைய மாணவர்கள் அனைவரும்  குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்கள் கடந்த கால பள்ளி பருவ நிகழ்வுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post