தூத்துக்குடி கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஹார்பர் ரேசிங் பிஜியன் கிளப் சார்பாக மதுரை தும்பபட்டியிலிருந்து 480 புறாக்கள் கலந்துகொண்ட 150 கிலோமீட்டர் புறா பந்தயம் நடைபெற்றது.
விழாவிற்கு கிளப் தலைவர் டைகர் வினோத் தலைமை தாங்கினார். செயலாளர் ரைமன்ட சாவியோ முன்னிலை வகித்தார். போட்டியில் அக்பர் புறா 1 மணி நேரம் 42 நிமிடத்தில் பறந்து வந்து முதலிடம் பெற்றது. பொன்ராஜ் புறா 1 மணி நேரம் 45 நிமிடத்தில் பறந்து வந்து இரண்டாம் இடம் பெற்றது. ராஜேஷ் புறா 1 மணி நேரம் 46 நிமிடத்தில் பறந்து வந்து மூன்றாம் இடம் பெற்றது.
வெற்றி பெற்ற அனைவருக்கும் கிளப் தலைவர் டைகர் வினோத் ஊக்க பரிசுகள் வழங்கி பாராட்டினார்.