வேலூர் மாவட்டம் கீழ்வல்லம் அருகே 450 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் - மூவர் கைது.!

 

வேலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர்   எஸ். ராஜேஸ் கண்ணன் உத்தரவின் பேரில்  கள்ளச்சாராயம் தயாரிப்பவர் மற்றும் விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள்  மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று (டிசம்பர் 24.12.2022) தேதி வேலூர் கிராமிய காவல் நிலையம் காவல் ஆய்வாளர்  பார்த்தசாரதி  தலைமையிலான போலீசார் வேலூர் TO கண்ணமங்கலம் ரோட்டில் கீழ்வல்லம் TOLL PLAZA அருகே சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த TATA SUMO வாகனத்தை வழி மறித்து சோதனை செய்ததில் லாரி ட்யூபில் விற்பனைக்காக சுமார் 450 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்தியது தெரிய வந்தது.

இதனையடுத்து கள்ளச்சாராயம் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் , சாராய கடத்தலில் ஈடுபட்ட ராம்குமார் த/பெ மோகன்,  ராமு த/பெ ராஜா ராமன், மற்றும் செல்வம் த/பெ பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது   மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post