தூத்துக்குடி: முன்னாள் அமைச்சர் கக்கன்ஜி அவர்களின் 41வது நினைவு தினம். தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் அமைச்சர் கக்கன்ஜி அவர்களின் 41வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி போல்டன்புரம் கக்கன்பூங்கா அருகே அமைந்துள்ள கக்கன்ஜி முழு உருவ சிலைக்கு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் சேகர், ஐசன்சில்வா, செந்தூர்பாண்டி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதின், அமைப்புசாரா மாவட்ட தலைவர் நிர்மல்கிறிஸ்டோபர், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலெட்சுமி, மகிளா மண்டல தலைவி சாந்தி,மாவட்ட துணை தலைவர்கள் தனபால், சின்னகாளை, காமாட்சிதனபால், மாவட்ட செயலாளர்கள் கோபால், ஜுட்சன், அழகுவேல், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியன், வார்டு தலைவர்கள் மைக்கேல்பிரபாகர், முத்துராஜ்,முனியசாமி,கிருஷ்ணன்,தனுஷ்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.