நேஷனல் புக் டிரஸ்ட் புதுடெல்லி.நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஆகியவை சார்பில் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் 37 வது தேசிய புத்தக கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது.
கோவில்பட்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் தேசிய புத்தக கண்காட்சி ஜனவரி 12 வரை நடைபெற உள்ளது.புத்தக கண்காட்சியில் வரலாற்று புதினங்கள்,வாழ்க்கை வரலாறு, இலக்கியம்,நாவல்,சிறுகதைகள்,கட்டுரைகள்,ஆங்கில நாவல்கள்,போட்டித் தேர்வு நூல்கள்,உள்பட5000 தலைப்புகளில்1 லட்சத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு.
தேசியபுத்தக கண்காட்சியினை புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமண பெருமாள் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் முனியசாமி,கோவில்பட்டி ஜேசிஐ தலைவர் தீபன் ராஜ். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரோட்டரி சங்க உறுப்பினர் முத்து முருகன் அனைவரையும் வரவேற்றார்.
புத்தக கண்காட்சியில் முதல் விற்பனையை புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமணப் பெருமாள் துவக்கி வைக்க ஜீவிஎன் கல்லூரி முதல்வர் சாந்தி மகேஸ்வரி,நூலகர் பாலா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
புத்தக கண்காட்சியில் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்கணேஷ்,காந்தி மண்டப பொறுப்பாளர் திருப்பதி ராஜா,காங்கிரஸ் நிர்வாகி காமராஜ்,ரோட்டரி சங்க உறுப்பினர்கள் நடராஜன், பூல்பாண்டி,ஆசிரியர்கள் செல்வின்,துரைராஜ்.ஜேசிஐ செயலாளர் சூர்யா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மதுரை மேலாளர் மகேந்திரன், கண்காட்சி பொறுப்பாளர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் திருநெல்வேலி மேலாளர் பூர்ணா ஏசுதாஸ் நன்றி கூறினார்.