திருப்பூர் ஜம்மனை ஓடை கரையில் ரூ.30 கோடி கட்டிடங்கள் இடிப்பு... வருவாய் துறை, மாநகராட்சி அதிரடி

 திருப்பூரில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 30 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை வருவாய் துறையினர் முன்னிலையில் இடித்து அப்புறப்படுத்தும் பணிகள் இன்று தொடங்கியது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நீர் நிலை ஆக்கிரமிப்பு இடங்கள் கணக்கெடுக்கப்பட்ட அவற்றை அப்புறப்படுத்த மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தனர். அதன் அடிப்படையில் வருவாய்த் துறையினர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள்  கணக்கெடுக்கப்பட்டது.  திருப்பூர் ஜம்முனை பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் கணக்கெடுக்கப்பட்டு ஏற்கனவே இரண்டு முறை சம்பந்தப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்படாமல் இருந்துள்ளது.


 இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் வருவாய்த்துறையினர் முன்னிலையில் இன்று அதிரடியாக ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றும் பணி நடைபெற்றது.  ஜம்மனை ஓடையை ஒட்டியுள்ள பகுதிகளில் 25 உரிமையாளர்களுக்கு சொந்தமான மூன்று மற்றும் நான்கு மாடி கட்டிடங்கள் என சுமார் 30 கோடிக்கும் அதிக மதிப்பிலான ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணி இன்று நடைபெற்றது  அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கும் வகையில் மாநகர காவல் துறை சார்பில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Previous Post Next Post