தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 3 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராயப்பன் மகன் சார்லஸ் (48) என்பவரை கடந்த 10.11.2022 அன்று முன்விரோதம் காரணமாக இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த வழக்கில் சின்னமணி நகரை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் சின்னமுத்து (39), மாரியப்பன் மகன் அஜய் (19) மற்றும் எட்டையாபுரம் துரைசாமி புரத்தைச் சேர்ந்த அக்கநாயக்கர் மகன் குருசாமி (38) ஆகியோரை தூத்துக்குடி தென்பாகம் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் கைதான 3பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார். இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 42 பேர் உட்பட 259 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.