தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!

 

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 48 மணிநேரத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் நிலவும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து கூறி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் சென்னை வானிலை நிலவரத்தை பொறுத்தமட்டில் அடுத்த 48 மணிநேரங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post