உடுமலை அருகே கொடூர விபத்தில் 10 வயது சிறுமி உள்பட 4 பேர் பரிதாப பலி

 திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள  மடத்துக்குளம்  நரசிங்கபுரம் செட்டியார் மில் அருகே இன்று மாலை ஆம்னி வேன் ஒன்றும், காய்கறி ஏற்றி வந்த  டாடா 407 வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.இந்த பயங்கர விபத்தில் 10 வயது சிறுமி உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தார்கள். 

14 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்தான். சம்பவ இடத்தில் பொதுமக்கள் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் பிணங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்  இறந்தவர்கள் விபரம் தெரிய வந்தது.

இதில் ஆம்னி ஓட்டுநர் நரசிங்கபுரத்தை சேர்ந்த  நாச்சிமுத்து கவுண்டர் மகன் முத்து(57),  இப்ராஹிம் பள்ளிவாசல் பின்புறம் விநாயகர் கோவில் அருகே வசிக்கும் சையத் இப்ராஹிம் மனைவி ஆசிபா பானு (35 ), சையது இப்ராஹிம் தாயார் ரசீதா பேகம் (55), சையத் இப்ராஹிம் மகள் சஸ்மிதா (10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர் என்பது தெரிந்தது.சையது இப்ராகிம் மகன் இஸ்மாயில் ஆபத்தான நிலையில் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரேதங்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக மடத்துக்குளம் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார்  விசாரணை செய்து வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமி உள்பட 3 பேர் இறந்தது உடுமலை மற்றும் மடத்துக்குளத்தில் பரிதாபத்தினை ஏற்படுத்தி உள்ளது.


Previous Post Next Post