பருவமழை தொடங்கியதையொட்டி பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதூர் பாண்டியாபுரம் ஊராட்சிக்குட்பட்ட எட்டையாபுரம் சாலையில் உள்ள உப்பாத்து ஓடை தூர்வாரும் பணியை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக வாரிய தலைவர் கௌதமன், கூடுதல் கலெக்டர் வளர்ச்சி தாக்ரே சுபம் ஞானதேவ் ராவ், தாசில்தார் நிஷாந்தினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டியராஜன், வெங்கடாச்சலம், உதவி செயற்பொறியாளர் அமலா, முன்னாள் எம்எல்ஏ டேவிட்செல்வின், மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் சரவணக்குமார், இளையராஜா, சுப்பிரமணி, மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரவி (எ) பொன்பாண்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, பகுதி செயலாளர் சிவக்குமார், புதூர் பாண்டியாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா முனியசாமி, துணைத்தலைவர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முத்துசெல்வி, முருகன், ஆனந்த வள்ளி, பார்வதி, பாரதிராஜன், ஊராட்சி செயலாளர் வள்ளியம்மாள், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்த குமார், வருவாய் ஆய்வாளர் சுகுணா, கிராம நிர்வாக அலுவலர் வீரமாமுனிவர் மற்றும் கபடி கந்தன், வக்கீல் கிருபாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.